அடேங்கப்பா.. எப்படி இருந்த வனிதா இப்ப எப்படி மாறிட்டார் பார்த்தீர்களா! ஷாக்கில் வாயடைத்துபோன ரசிகர்கள்!!

அடேங்கப்பா.. எப்படி இருந்த வனிதா இப்ப எப்படி மாறிட்டார் பார்த்தீர்களா! ஷாக்கில் வாயடைத்துபோன ரசிகர்கள்!!



vanitha-throw-back-photos-viral

தமிழ் சினிமாவில்  விஜய்யுடன் இணைந்து சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் நடிகை வனிதா. இப்படத்தை தொடர்ந்து அவர் சில திரைப்படங்களிலேயே நடித்திருந்தார். பின்னர் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து அவர் தனது மூன்றாவது திருமணத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தார். ஆனால் அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் அவர் அடுத்ததாக முன்னேறி வருகிறார். இவர் யூடியூபில் ஏராளமான சமையல் வீடியோக்கள், அழகு குறிப்புகள் போன்றவற்றை வெளியிட்டு வருகிறார். மேலும்பல திரைப்படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது 1999ல் எடுத்த தனது பழைய புகைப்படத்துடன் தற்போது உள்ள புதிய புகைப்படத்தை இணைத்து வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் எப்படி இருந்த வனிதா இப்படி மாறிவிட்டார் பார்த்தீர்களா என ஷாக்காகியுள்ளனர்.