என்ன இதெல்லாம்!! நிறைமாத கர்ப்பிணியாக நடிகர் வனிதா! ரசிகர்களை ஷாக்காக்கிய அந்த புகைப்படம்!!

என்ன இதெல்லாம்!! நிறைமாத கர்ப்பிணியாக நடிகர் வனிதா! ரசிகர்களை ஷாக்காக்கிய அந்த புகைப்படம்!!


Vanitha pregnant photo viral for movie

நடிகை வனிதா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பென்சில் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மணிநாகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் வாசுவின் கர்ப்பிணிகள்.

இந்தப் படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ  தயாரிக்கிறார். அவின் மோகன் சித்தாரா இசையமைக்கும் இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அண்மையில் வாசுவின் கர்ப்பிணிகள் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியானது. அதில் நிறைமாத கர்ப்பிணிகளாக இருந்த அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் மற்றும் சீதா ஆகியோருடன் நீயா நானா கோபி நின்றார். கோபி இந்த படத்தில் மருத்துவராக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது வனிதாவின் கேரக்டர் குறித்த போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. படத்தில் வனிதா ‘பல்லவி’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போன்று போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் அதற்கு நெட்டிசன்கள் பலவிதமான கமெண்டுகளை வெளியிட்டு வருகின்றனர்.