நெற்றியில் குங்குமம் இருக்கு., புருஷன் யாருனு கேட்குறாங்க.! கொந்தளித்த வனிதா.!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக விளங்கிய விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து அவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். பின்னர் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு வெற்றியாளருமானார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நடன ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டிருந்தார்.
இந்த நிலையில், வனிதா தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், தனியார் டிவிக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை சொன்ன விஷயங்களில் சில எனக்குப் பிடிக்கவில்லை.
அந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை அனைவருமே ஸ்டார்களாகத் தான் உள்ளே சென்றோம். அனைவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான். அதற்குரிய மரியாதை அனைவருக்குமே கொடுத்து தான் ஆகவேண்டும். அது கொஞ்சம் தளர்வானதில் எனக்கு ஈடுபாடு இல்லை. அதனால் தான் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகிவிட்டேன்.
சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது என்பது உண்மை தான். தனிப்பட்ட விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள். நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் புருஷன் என்று கேட்கிறார்கள். அறிவே இல்லாமல் கேள்வி கேட்கிறார்கள். சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுபவரை பின் தொடராமல் விலகிச் செல்வதே நல்லது என்று குறிிப்பிட்டுள்ளார்.