புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
தெய்வ மகள் நடிகை வாணி போஜனுக்கு அடித்த அதிஷ்டம் - வெளியான புதிய தகவல்
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா சீரியல் மூலம் சின்னத்திரையில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை வாணி போஜன். அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான "தெய்வமகள்" சீரியலில் சத்தியா என்ற கதாபாத்திரத்தின் மூலம் அதிகம் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஜீனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார். இவ்வாறு சின்னத்திரையில் கலக்கிய வாணிக்கு தற்போது வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாகும் ஒரு வெப் சீரியலில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதில் வாணிக்கு ஜோடியாக நடிகர் பரத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.