கசிந்தது தல அஜித்தின் ‘வலிமை’ பட கதை! அட.. இந்தப் படத்திலும் இப்படியா?? ஷாக்கான ரசிகர்கள்!

கசிந்தது தல அஜித்தின் ‘வலிமை’ பட கதை! அட.. இந்தப் படத்திலும் இப்படியா?? ஷாக்கான ரசிகர்கள்!


valimai-story-leaked-in-imdb

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் வலிமை படத்தின் ஒவ்வொரு அப்டேட்டிற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விளம்பரங்கள் மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

Ajith

இந்நிலையில் ஐஎம்டிபி பக்கத்தில் வலிமை படக்கதை என்ன என்பது குறித்த ஒருவரி இடம்பெற்று ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளது. அதாவது இளம் வயதில் அஜித் பைக்ரேஸ் வீரராக இருப்பாராம். பின்னர் சிலரின் சதியால் அதை விட்டு விலகி, போலீஸாக மாறி அவர்களை பழிவாங்குவதுதான் கதை என கூறப்படுகிறது. விவேகம் படத்தை போலவே இந்த படத்திலும் தலயை நம்பவைத்து ஏமாற்றுவார்களா என ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.