சினிமா

தொடரும் எதிர்ப்புகள்! வளர்பிறையில் கறை எதற்கு? விஜய் சேதுபதிக்கு கவிஞர் வைரமுத்து விடுத்த வேண்டுகோள்!

Summary:

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் நிலையில் அவருக்கு வேண்டுகோள் விடுத்து கவிஞர் வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமான 800ல் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்குகிறார். இந்நிலையில் முத்தையா முரளிதரன் இலங்கை அரசுக்கு ஆதரவானவர். எனவே இப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
மேலும் பல திரையுலக பிரபலங்களும் அவருக்கு இது குறித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இந்நிலையில் இப்படம் முழுக்க ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட படம். இதில் எந்தவித அரசியலும் கிடையாது. 
இந்த படம் இளைய சமுதாயத்திற்கும், வருங்கால விளையாட்டு வீரர்களுக்கும் தங்கள் வாழ்க்கை பயணத்தில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை கடந்து சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். இதில் ஈழத் தமிழர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சிகள் கிடையாது என படக்குழு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டது. 

இந்நிலையில் விஜய்சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து கவிஞர் வைரமுத்து அவர்கள் டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கலையாளர் விஜய் சேதுபதிக்கு… சில நேரங்களில் செய்து எய்தும் புகழைவிடச் செய்யாமல் எய்தும் புகழே பெரிதினும் பெரிது செய்யும். நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள். வளர்பிறையில் கறை எதற்கு? இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்; நீங்கள் விவேகி என பதிவிட்டுள்ளார்.

 


Advertisement