#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!
வடிவேலுவின் பிரச்சனையை தீர்த்து வைத்தது யார் தெரியுமா? என்னை மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இவர்தான்.! வடிவேலு ஓப்பன் டாக்
வடிவேலுவின் பிரச்சனையை தீர்த்து வைத்தது யார் தெரியுமா? என்னை மீண்டும் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் இவர்தான்.! வடிவேலு ஓப்பன் டாக்

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனக்கென தற்போது வரை யாராலும் நிரப்பபமுடியாத ஒரு மாபெரும் இடத்தை தக்க வைத்திருப்பவர் நடிகர் வடிவேலு.
தனது நகைச்சுவையால் மக்களை ஓயாமல் சிரிக்க வைத்த நடிகர் வைகைப்புயல் வடிவேலு, கடந்த பத்தாண்டுகளில் விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு மிகவும் குறைவான படங்களிலேயே நடித்தார். இதற்கு காரணம், அவருடைய படம் சில பிரச்னைகளில் சிக்கியதால் அவர் தொடர்ந்து நடிக்க முடியாத நிலை இருந்தது.
நடிகர் வடிவேலு முன்பைப் போல தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அவருடைய 60வது பிறந்தநாளை முன்னிட்டு வேண்டுகோளாக வைத்தனர். வடிவேலு நேற்று முன்தினம் தன் பிறந்தநாளை கொண்டாடினார். தான் நடிக்கும் நாய் சேகர் படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியானது. நாய் சேகர் படம் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு. லைகா நிறுவனம் தயாரிக்கும் அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, என்னை நிறைய பேர் வாழ்த்தியதில் சந்தோஷம். நாய் சேகர் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அளவுக்கு பிரச்சனையை முடித்தது ஐயா தமிழ்குமரன் தான். ஜி.கே. மணி ஐயாவின் மகன் தான் என்றும் லைகா நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கிறார் என்றும் இவ்வளவு பிரச்சனையையும் சரி செய்து கொடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.