சினிமா

12 வருஷங்களுக்கு பிறகு மீண்டும் பிரபல மாஸ் ஹீரோவுடன் இணையும் நடிகர் வடிவேலு! செம குஷியில் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாப

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து, தனக்கென யாராலும் நிரப்பமுடியாத ஒரு தக்க  இடத்தை வைத்திருப்பவர் நடிகர் வடிவேலு. அவரது உடல் பாவனைகளும், காமெடியான டயலாக்கும்  வேற லெவல். இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் காமெடி நடிகராக கலக்கி வந்த வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி  படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அவர் சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பின்னர் சில காரணங்களால், பிரச்சினைகளால் நடிகர் வடிவேலு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. அதனால் அவர் நீண்ட காலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். பின்னர் இறுதியாக விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகர் வடிவேலு சூர்யாவின் 40வது திரைப்படத்தில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளார். இந்த படத்திலேயே வடிவேலு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் வடிவேலு ஏற்கனவே நடிகர் சூர்யாவுடன் இணைந்து வேல், ஆறு, ஆதவன், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


Advertisement