சினிமா

மறைந்த நடிகர் வடிவேலு பாலாஜிக்கு கிடைத்த கவுரவம்! அட.. அவரது மகள் இவர்தானா? தீயாய் பரவும் புகைப்படம்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் வடிவேலு பாலாஜி. இவர் நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேலுவின் அனைத்து காமெடிகளிலும் அசால்டாக கலக்கி ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இந்த நிலையில் 45 வயது நிறைந்த அவர்  செப்டம்பர் 10-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இது திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவர் இறந்து சில மாதங்களானாலும் தனது காமெடியால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்கவைத்த அவரை இன்றும் பலரும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் வடிவேல் பாலாஜியை கவுரவிக்கும் விதமாக பிரபல ஊடகம் வழங்கிய விருது வழங்கும் விழாவில், தொலைக்காட்சித் துறையில் மிகவும் கொண்டாடப்பட்ட காமெடியன் என்ற விருது வடிவேல் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. அதனை அவரது குடும்பத்தார்கள் பெற்றுக்கொண்டனர். மேலும் வடிவேல் பாலாஜியின் மகளும் அங்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில் அதனைக் கண்ட பிரபலங்கள் பலரும் கண்கலங்கியுள்ளனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 


Advertisement