சினிமா

இந்த வாரம் இத்தனை படங்கள் வெளியாகிறதா? முழு பட்டியல் இதோ!

Summary:

Upcoming movies on march first 2019

முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே அதிகப்படியான திரைப்படங்கள் வெளியாகின. ஆனால் தற்போது வாரா வாரம் அதிகப்படியான படங்கள் வெளியாகிறது. முன்பெல்லாம் திரையரங்குகள் மிகவும் குறைவு. தற்போது திரையரங்குகள் மிகவும் அதிகம். அதிகப்படியான படங்கள் வெளியாக இதுவும் ஒரு காரணம்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் மிக குறைந்த அளவிலான படங்களே வெளியாகின. பிப்ரவரி மாதமும் சுமாரான அளவிலையே படங்கள் வெளியானது. வரும் மார்ச் மாதம் பள்ளி தேர்வுகள் நெருங்க இருப்பதால் மார்ச் மாதமும் குறைந்த அளவிலான படங்களே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

Image result for thirumanam movie

ஆனால், வரும் வெள்ளிக்கிழமை, அதாவது மார்ச் 1 ஆம் தேதி 7 படங்கள் வரை வெளியாக உள்ளன. திருமணம், தடம், 90 எம்எல், தாதா 87, பிரிவதில்லை, மானசி, விளம்பரம்" என 7 படங்கள் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளன. 90 எம்எல் படத்தில் ஓவியா நடித்துள்ளார். இந்த படம் வெளியாவதற்கு முன்னரே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துள்ளது.

மேலும், நீண்ட இடைவேளைக்கு பிறகு திருமணம் படம் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார் இயக்குனர் சேரன். படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் சேரன். திருமணம் திரைப்படம் ஒரு குடும்ப படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெரும் என எதிர்பார்கபடுகிறது.


Advertisement