உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம்.. விட்டுக் கொடுத்த தனுஷ் மற்றும் விக்ரம்.?

உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படம்.. விட்டுக் கொடுத்த தனுஷ் மற்றும் விக்ரம்.?


Udayanithi last movie in cine industry

கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற ஹிட் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி நாயகனாக நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வடிவேலு,'பகத்பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

Mamannan

வடிவேலு இப்படத்தில் நகைச்சுவையிலிருந்து விலகி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமான 'மாமன்னன்' திரைப்படம் உருவான விதம் குறித்து மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

மாரி செல்வராஜ் கூறியதாவது, "நான் மாமன்னன் திரைப்படத்திற்கு முன்பு விக்ரம் மகன் துருவிக்ரமுடன் ஒரு படமும், தனுஷுடன் ஒரு படமும், இயக்குவதாக இருந்தேன். ஆனால் உதயநிதி கடைசியாக ஒரு படம் பண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் நான் 'மாமன்னன்' படம் இயக்க சம்மதித்தேன்.

Mamannan

ஆனால் துரு மற்றும் தனுஷிடம் கேட்க வேண்டும் என்று கூறியதற்கு நானே கால் பண்ணி கேட்கிறேன். என்று உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் கேட்டு சம்மதம் வாங்கினார். இதன் பின்பே 'மாமன்னன்' திரைப்படம் படப்பிடிப்பு ஆரம்பமானது. ஜூன் மாதம் 'மாமன்னன்' திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.