வாவ்...இதெல்லாம் அந்த படத்திற்காகதானா! செம கியூட்டாக நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!

வாவ்...இதெல்லாம் அந்த படத்திற்காகதானா! செம கியூட்டாக நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!


trisha-post-image-with-horse

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை திரிஷா.இவர் ரஜினி, கமல், விஜய்,அஜித் சூர்யா என பல உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகை திரிஷாவின் நடிப்பில் உருவான  ராங்கி மற்றும் பரமபத விளையாட்டு போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதைத்தொடர்ந்து திரிஷா மணிரத்னம் இயக்கத்தில், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடிக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் நடிகை திரிஷா தற்போது குதிரை பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தான் குதிரையுடன் நிற்கும் புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் இதெல்லாம் பொன்னியின் செல்வன் படத்திற்காகவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.