பாலிவுட்டில் சல்மான் கான் படத்தில் நடிக்க போகும் த்ரிஷா.. வாழ்த்து கூறிவரும் ரசிகர்கள்.!

பாலிவுட்டில் சல்மான் கான் படத்தில் நடிக்க போகும் த்ரிஷா.. வாழ்த்து கூறிவரும் ரசிகர்கள்.!


Trisha Bollywood entry

தமிழ் திரைதுறையில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.

trisha

ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் பல கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் தற்போது தனது விடாமுயற்சியின் மூலம் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், லியோ போன்ற திரைப்படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி சினிமாவில் பிஸியான இருந்து வருகிறார் திரிஷா.

trisha

இது போன்ற நிலையில், தற்போது பாலிவுட்டில் முதன் முறையாக சல்மான்கான் நடிக்கவிருக்கும் திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இச்செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.