தனது நீண்டநாள் ஆசையை நிறைவேற்றி கொண்ட திரிஷா! அப்படி என்ன ஆசை தெரியுமா?
கடந்த 10 வருடங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து கலக்கியவர் நடிகை திரிஷா. விஜய், அஜித், சூர்யா, விஷால் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிர்களின் படங்களில் நடித்துள்ளார் த்ரிஷா. கடைசியாக நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக பேட்ட படத்திலும் நடித்திருந்தார்.
ஆடல், பாடல், கவர்ச்சி மட்டும் இல்லாது தனக்கான முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவருக்கு என்று நீண்ட நாள் ஒன்று இருந்து வருகிறது. அதாவது நடிகர் கமலுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசை அது மன்மதன் அம்பு திரைப்படத்தின் மூலம் நிறைவேறியது.

அடுத்ததாக இவருக்கு நடிகர் ரஜினிகாந்த் அவருடன் நடிக்க ஆசை இருந்துள்ளது அது பேட்ட படத்தின் மூலம் நிறைவேறியதாக கூறியுள்ளார். அதன் பின் நடிகர் சிரஞ்சீவியுடன் நடிக்கும் ஆசையை ஒரு தெலுங்கு படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளதாக திரிஷா கூறியுள்ளார்.