சினிமா

நேசமணி விரைவில் குணமாக பிரபல திரையரங்கம் செய்துள்ள காரியத்தை பார்த்தீங்களா.!

Summary:

theatre owner tweet about pray for nesamani

ட்விட்டரில் நேற்று முதல் இந்திய அளவில்  ட்ரெண்டிங்கில் இருந்த '#Pray_for_Neasamani' என்று ஹேஷ் டாக் தற்போது உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. யார் இந்த நேசமணி என்ற குழப்பம் பலருக்கும் இருந்து வந்தது. 
 
ப்ரெண்ட்ஸ் படத்தில் தளபதி விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா ஆகியோர் இடம்பெற்ற  வடிவேலுவின் சுத்தியல் காமெடிதான் தற்போது சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியவந்துள்ளது. சிறிய தீயாய் பற்றிய '#pray_for_Neasamani' என்ற ஹேஷ் டேக் தற்போது காட்டுத் தீயாய் பரவி வருகிறது. சாதாரண நெட்டிசன்கள் துவங்கி திரை மற்றும் விளையாட்டு பிரபலங்களும் இதில் ட்வீட் செய்து வருகின்றனர்.

nesamani க்கான பட முடிவு

இந்நிலையில் ரோகினி திரையரங்க டுவிட்டர் பக்கத்தில், ஜமீன் பேலஸில் காண்ட்ராக்டர் நேசமணிக்கு நேற்று நடந்த விபத்து காரணமாக அவருக்கு சீக்கிரம் குணமாக வேண்டி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படவிருந்த என்கேஜி படத்தின் முதல் காட்சி 5.30 மணிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என பதிவிடபட்டிருந்தது.

மேலும் அதனை தொடர்ந்து திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் என்.கே.ஜி சிறப்புக் காட்சியின்போது நேசமணி விரைவில் குணமாக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும் என பதிவிட்டுள்ளார். 


Advertisement