#சற்றுமுன் : விஜயின் ஜனநாயகன் போஸ்டரில் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் படுகுஷி.!
பிரபாஸின் தி ராஜா சாப்.. படத்திற்கு வந்த திடீர் சிக்கல்.! என்ன நடந்தது??
திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து பான் இந்தியா ஹீரோவாக வலம் வருபவர் பிரபாஸ். அவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி ராஜா சாப். ஹாரர் காமெடி படமாக உருவாகும் இதனை மாருதி இயக்கியுள்ளார். இப்படத்தை பியூப்பிள் மீடியா பேக்டரி, ஐவி என்டர்டெயின்மென்ட் ஆகியவை இணைந்து தயாரித்தது.
தி ராஜா சாப் படத்தில் நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.மேலும் அவர்களுடன்
போமன் இரானி, விடிவி கணேஷ், சப்தகிரி, சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் 'தி ராஜா சாப்' படத்திற்கு எதிராக டெல்லி உயர்நீதி மன்றத்தில் ஐவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில், ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவிற்குள் படத்தை முடித்து வெளியிடுவது, நிதி பயன்படுத்தப்படுவது உட்பட பல்வேறு விஷயங்களில் பியூப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியுள்ளது. அதனால் இப்படத்திற்காக நாங்கள் முதலீடு செய்த ரூ.218 கோடியை 18 சதவிகித வட்டியுடன் திருப்பி உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படம் அறிவிக்கப்பட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா? என சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: தி ராஜா சாப்.. நடிகர் பிரபாஸுக்கு தாத்தாவாகும் பிரபல முன்னணி ஸ்டார்.! வேற லெவல் லுக்கில் வைரலாகும் போஸ்டர்!!
இதையும் படிங்க: 36 இணையதள சேவை நிறுவனங்கள்.. கூலி திரைப்படத்தை வெளியிட தடை.! உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!!