36 இணையதள சேவை நிறுவனங்கள்.. கூலி திரைப்படத்தை வெளியிட தடை.! உயர் நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!!



High court block 36 websitefor not release coolie movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முழுவதும் ஆக்சன் நிறைந்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. மேலும் டிக்கெட் முன்பதிவில் மட்டும் இப்படம் 50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Coolie

இந்த நிலையில் படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் தயாரிப்பு நிறுவனம் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்கள் மற்றும் கேபிள் நெட்ஒர்க்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில் இதுதொடர்பாக நீதிபதி 36 இணையதள சேவை நிறுவனங்களுக்கும், 5 கேபிள் டீவி நெட்ஒர்க் நிறுவனங்களுக்கும் கூலி திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: லியோ வெற்றியால் டபுள் மடங்கு உயர்வு.! கூலி படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா??

இதையும் படிங்க: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சூப்பர் ஸ்டாரின் கூலி படத்தின் கதை இதுதானா?? இணையத்தில் கசிந்த தகவல்!!