பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்காக, தர்ஷன் விடுத்த செம மாஸ் அறிவிப்பு! வீடியோ இதோ!!

பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்காக, தர்ஷன் விடுத்த செம மாஸ் அறிவிப்பு! வீடியோ இதோ!!


tharshan post video about srilanka going

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த விளம்பர மாடலான தர்ஷன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

மேலும் பிக்பாஸ் இறுதிவரை சென்று இவர்தான் வெற்றிபெறுவார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் அவர் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

bigboss

ஆனாலும் அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் குவிந்தது. மேலும் நடிகர் கமலும் அவரது ப்ரொடக்சன் மூலம் தர்ஷனுக்கு படவாய்ப்பு தருவதாகவும் கூறி இருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் தர்ஷன் நண்பர்களுடன்சுற்றுதல், பிக்பாஸ் கொண்டாட்டம், படவேலை என பிஸியாக இருந்தார்.

இந்த நிலையில் ஏன் இன்னும் இலங்கைக்கு வரவில்லை என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். அதனை தொடர்ந்து தர்ஷன் அவர்களுக்கு பதில் அளிக்குமாறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இலங்கைக்கு வருவது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.