கமலின் இந்தியன்- 2 வில் இணைகிறாரா இந்த பிக்பாஸ் சீசன்3 பிரபலம்.! வெளியான மாஸ் தகவல் இதோ..

tharsahan going to act in indian 2 with kamal


tharsahan-going-to-act-in-indian-2-with-kamal

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாகவும்,  பரபரப்பாகவும் இன்றுடன் 100வது நாளை கடந்துள்ளது. மேலும் 16 போட்டியாளர்கள் களமிறங்கிய இந்த பிக்பாஸ் வீட்டில் தற்பொழுது ஷெரின், லாஸ்லியா, முகேன்,  சாண்டி என நான்கு பேர் மட்டுமே இறுதி நிலையில் உள்ளனர். 

இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் இலங்கையை சேர்ந்த தர்சன். விளம்பர மாடலான இவர் அனைத்து டாஸ்க்குகளையும் விறுவிறுப்பாக செய்து வந்தநிலையில் கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

indian 2

 தர்சன் இறுதிவரை சென்று பிக்பாஸ் பட்டத்தை வெல்வார் என அனைவரும் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளை பெற்று அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தர்ஷன் கமலின் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  அதாவது தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கமல்ஹாசனை சந்தித்து பேசிள்ளார். இந்நிலையில் இவர்களது சந்திப்பு இந்தியன் 2 படத்தில் தர்ஷன் நடிப்பது குறித்து என தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் தர்சனுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.