தலைவா படத்தில் நடித்த 2வது ஹீரோயினா இது? இப்போ எப்படி இருகாங்க பாருங்க!
தளபதி விஜய் நடிப்பில் AL விஜய் இயக்கத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை
பெற்ற திரைப்படம் தலைவா. மிகப்பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகிய திரைப்படம். கமல் நடித்த நாயகன் பட அம்சத்தை கொண்டது தலைவா திரைப்படம்.
இப்படத்தின் 2ம் பாகம் எப்போது என்று ரசிகர்கள் தன்னிடம் அதிகம் கேட்கிறார்கள் என்று இயக்குனர் ஏ.எல். விஜய் அண்மையில் பேட்டியில் கூறியிருந்தார்.
படத்தில் அமலாபால் நாயகி நடித்திருந்தார், அதோடு ராகினி என்ற துணை நடிகை ஒருவர் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழி படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார் இந்த ராகினி.
தற்போது இவரது இப்போதைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. தலைவா படத்தில் குடும்ப பெண் போல் நடித்த இவரா இது என்று ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
