வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
தன் மகளுக்கு எதுவும் தெரிய கூடாது என்று நினைத்த அஜித்! நடந்தது என்ன?
நடிகர்களிலையே சற்று வித்தியாசமானவர் தல அஜித். மிகவும் அமைதியானவர், பொறுமையானவரும் கூட. இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் விசுவாசம் பட ஷூட்டிங் முடிந்து குடும்பத்துடன் கோவா சென்றுள்ளார் தல அஜித். அவர் குடும்பத்துடன் விமானத்தில் ஏறும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
பொதுவாக தல அஜித் தன் மகள் அனோஷ்காவுடன் தினமும் காலையில் கடற்கரை சாலையில் சைக்கிள் பயிற்சி செய்து வருவது வழக்கமாம். அவ்வாறு பயிற்சி செய்கையில் ரசிகர் ஒருவர் அவரை பின்னால் விரட்டி சென்று தல தல என கூப்பிட்டாராம்.
உடனே சைக்கிளை நிறுத்திய அஜித், நான் எனது குடும்பத்துடன் நேரம் செலவிட வந்துளேன் தொந்தரவு செய்யாதீர்கள் என கூறியுள்ளார்.அந்த ரசிகர் புகைப்படம் எடுக்க வேண்டும் என தன் ஆசையை சொல்ல அவர் இந்த மாதிரியான விஷயங்கள் என் மகளுக்கு தெரியக்கூடாது என அவளை எளிமையாக வளர்க்கிறேன். உங்கள் போன் நம்பர் கொடுங்கள். நானே போன் செய்கிறேன் என நம்பரை வாங்கிவிட்டு மகளுடன் சென்றுவிட்டாராம்.
பின் ஒரு மணிநேரம் கழித்து அவருக்கு போன் செய்து குறிப்பிட்ட இடத்திற்கு வரசொல்லி போட்டோவுக்கு போஸ் கொடுத்து அந்த ரசிகரை வாழ்த்தி அனுப்பினாராம்.