சினிமா

அட.. இது வேறலெவல் அப்டேட்! தல ரசிகர்களை குஷியாக்கிய சூப்பர் தகவல்.! என்னனு பார்த்தீங்களா!

Summary:

அட.. இது வேறலெவல் அப்டேட்! தல ரசிகர்களை குஷியாக்கிய சூப்பர் தகவல்.!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் தல அஜித் தற்போது போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் ஹூமா குரேஷி, சுமித்ரா, யோகிபாபு, புகழ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இரு ஆண்டுகளாகவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் வலிமை அப்டேட் குறித்து அஜித் ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் தொடங்கி பிரதமர் வரை அனைவரிடமும் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வலிமை படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தல 61வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது தல அஜித் மீண்டும் போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இந்நிலையில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் தற்போது தல 61வது படம் அடுத்த வருடம் தீபாவளியை முன்னிட்டு ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தல ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement