சினிமா

அடேங்கப்பா! தல 60 படத்திற்காக இப்படியொரு அசத்தலான மாற்றமா? மாஸ் காட்டும் அஜித்!! வைரலாகும் புதிய கெட்அப் !!

Summary:

thala 60 movie new getup viral

பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையே இல்லாதவர் தல அஜித். இவர் தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து  முன்னணி நடிகராக உள்ளார். இவருக்கென தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருவர்.

இவர் தற்போது சமூக அக்கறையோடு படம் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. 

அதனை தொடர்ந்து தற்போது போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் வசூல் சாதனையும் குவிகிறது.பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தை தொடர்ந்து அஜீத்துக்கு பெண் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. 

இதனைதொடர்ந்து அஜித்தின் 60வது படத்தையும் போனி கபூர் தயாரிக்க ஹெச்.வினோத் இயக்கஉள்ளாராம். ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு  இந்த மாத இறுதியில் பூஜையுடன் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் அஜித் பைக் ரேஸராக நடிக்கவுள்ளாராம். மேலும் அதற்காக கடுமையான தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு உடல் எடை குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

       thala 60


Advertisement