சும்மா அதிருதே.. கலக்கலான நடனத்துடன் செம்ம மாஸாக வெளிவந்த பிக்பாஸ் சீசன் 5 ப்ரோமோ! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!telungu bigboss season 5 promo released

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை இதன் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் விரைவில் 5வது சீசன் தொடங்கப்படவுள்ளது. பிக்பாஸ் 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். மேலும் 5வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழை போலவே தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் ஒளிபரப்பாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஜூனியர் என்டிஆர் தொகுத்து வழங்கினார். பின்னர் 2வது சீசனை நானி மற்றும் 3, 4வது சீசனை நடிகர் நாகார்ஜுனா ஆகியோர் தொகுத்து வழங்கினார். 
அதனைத் தொடர்ந்து தற்போது ஐந்தாவது சீசனையும் நாகார்ஜுனாவே தொகுத்து வழங்கவுள்ளார். 

 இந்த நிலையில் தெலுங்கு பிக்பாஸ் ப்ரோமோவை ஸ்டார் மா தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில்  மக்கள் செம போராக சுறுசுறுப்பில்லாமல் தூங்கி வழிந்து கொண்டிருக்கும் நிலையில், நாகார்ஜுனா கையில் துப்பாக்கியுடன் கெத்தாக வந்து 
போருக்கு சொல்லுங்க குட்பை வந்துடுச்சி பிக்பாஸ் சீசன் 5னு சொல்லுகிறார். அசத்தலான நடனத்துடன் வெளிவந்த இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது,