தமிழகம் சினிமா

உதயமாகிறது திரைத்துறையில் புதிய சங்கம்! இனியாவது சிக்கல்கள் தீருமா?

Summary:

tamil cinima - financiear association- chennai

திரைப்படத்துறையில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பெப்சி தொழிலாளர்கள் சங்கம் என பல சங்கங்கள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் தற்போது பைனான்சியர் சங்கம் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.

திரைப்படத் துறையில் முதலீடு செய்பவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த சங்கத்தின் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் சில முக்கிய பிரச்சினைகளை பற்றி ஆராய்ந்து அதற்கான முடிவுகளை எட்ட சில முயற்சிகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

அதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவது சில நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் ஒரு திரைப்படத்திற்கு கால்சீட் கொடுத்துவிட்டு அந்த படத்தில் முழுவதுமாக பணிபுரிந்தது முடித்துக் கொடுக்காமல் மற்றொரு படத்திற்கு பணிபுரிய சென்று விடுகின்றனர். இதனால் தயாரிப்பாளர்கள் மற்றும் பைனான்சியர்கள் மற்றும் அதை நம்பி பணிபுரியும் தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றன.

ஆகவே அதனைப் பற்றிய விரிவான விவாதம் நடைபெற்றது. மேலும் ஒரு சில காரணங்களால் வெளிவராத திரைப்படங்களையும் வெளியிடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.


Advertisement