சினிமா

ரீமேக்காகும் சூப்பர்ஹிட் திரைப்படம்! இந்த சர்ச்சையான கதாபாத்திரத்தில் நடிகை தமன்னா நடிக்கிறாரா? ஷாக்கான ரசிகர்கள்!

Summary:

Tamanna act in anthathoon telungu remake movie

கடந்த 2018ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகப்பட்ட விமர்சனங்களையும், வரவேற்பும் பெற்ற திரைப்படம் அந்தாதுன். இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது அந்தாதூன் படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஹீரோவாக நிதின் நடிக்க உள்ளார். மேலும் தபு கதாபாத்திரத்தில் தமன்னாவும்,  ராதிகா ஆப்தே வேடத்தில் நபா நடேஷும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு மெர்லபகா காந்தி என்பவர் வசனம் எழுதி இயக்க உள்ளார்.

அந்தாதுன் திரைப்படத்தில் தபு கணவரை விட்டுவிட்டு  வேறொருவருடன் தகாத உறவு வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தெலுங்கு ரீமேக்கில் அந்த சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்திலேயே நடிகை  தமன்னா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

 


Advertisement