கலக்குங்க சிம்பு.! வெந்து தணிந்தது காடு படத்திற்கு வாழ்த்து கூறிய பிரபல முன்னணி நடிகர்!! சிம்புவின் பதிலை பார்த்தீங்களா!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அப்பொழுதே பலரையும் கவர்ந்தவர் நடிகர் சிம்பு. பின் ஹீரோவாக அவதாரமெடுத்து பல படங்களில் மாஸாக நடித்த அவர் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்று பெருமளவில் பிரபலமானார். ஆனால் இடையில் அவரது திரைவாழ்க்கையில் சிறு சறுக்கல் ஏற்பட்டது.
சிம்பு உடல் எடை அதிகரித்த நிலையில் அவரது நடிப்பில் வெளிவந்த படங்கள் சில தோல்வியை தழுவியது. பின் சிம்பு தனது தீராத கடின உடற்பயிற்சியால் உடல் எடையை நன்கு குறைத்து செம ஹேண்ட்சமாக மாறினார். பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மாநாடு படம் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. தொடர்ந்து சிம்பு தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்த வெந்து தணிந்தது காடு படம் நேற்று திரையரங்குகளில் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பலரும் நடிகர் சிம்புவிற்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் டாப் ஸ்டாராக வலம் வரும் சூர்யா தனது டுவிட்டரில், "வெந்து தணிந்தது காடு படம் குறித்து நல்ல விஷயங்களை கேள்விபடுகின்றேன். படம் பார்க்க காத்திருக்கின்றேன். கௌதம் மேனனுக்காக மிகவும் சந்தோஷப்படுகின்றேன். கலக்குங்கள் சிம்பு. படம் பெரியளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார். இந்த பதிவை கண்ட சிம்பு, மிக்க நன்றி அண்ணா என பதிலளித்துள்ளார்.