சொன்னதை செய்துகாட்டிய நடிகர் சூர்யா! முதற்கட்டமாக 1.5 கோடி நிதியுதவி! குவியும் வாழ்த்துக்கள்!!

சொன்னதை செய்துகாட்டிய நடிகர் சூர்யா! முதற்கட்டமாக 1.5 கோடி நிதியுதவி! குவியும் வாழ்த்துக்கள்!!


Surya has donated 1.5 crore to cinema industry

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருந்தநிலையில், 
கொரோனா ஊரடங்கு,  அச்சுறுத்தல் காரணமாக படம்  வெளியாகாமல் இருந்தது. 

இந்நிலையில் சூரரைப் போற்று  படத்தை அக்டோபர் 30-ந்தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளதாக சமீபத்தில் சூர்யா அறிவித்திருந்தார். 

soorarai potru

அப்பொழுது அவர் வெளியிட்ட அறிக்கையில், சூரரைப்போற்று திரைப்படத்தின் வெளியீட்டுத் தொகையிலிருந்து ரூ.5 கோடி பொதுமக்களுக்கும், திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் கொரோனா களத்தில் பணியாற்றியவர்களுக்கும் அளிக்கவிருப்பதாகவும்  தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அதன்  முதற்கட்டமாக 5 கோடியிலிருந்து  1.5 கோடியை நடிகர் சூர்யா திரையுலகினருக்கு அளித்துள்ளார். அதாவது தொழிலாளர்கள் அமைப்பான பெப்ஸிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ரூ.30 லட்சமும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.