இயக்குனர் பாலாவின் பர்த்டே ட்ரீட்! சூர்யா வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
இயக்குனர் பாலாவின் பர்த்டே ட்ரீட்! சூர்யா வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்குமுன் பாலா மற்றும் சூர்யா கூட்டணியில் பிதாமகன், நந்தா போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த வெற்றி கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். 2டி என்டர்டைன்மெண்ட்' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப் படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 41' என பெயரிடப்பட்டிருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இயக்குனர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் குறித்த அசத்தலான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டைட்டில் போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா 41 வது படத்திற்கு வணங்கான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.. என பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.
உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா…! #DirBala #வணங்கான் #Vanangaan #Achaludu pic.twitter.com/OAqpCRCWgx
— Suriya Sivakumar (@Suriya_offl) July 11, 2022