சர்க்கார்: ட்விட்டரில் விட்டு விளாசிய ரஜினிகாந்த்! அவங்களே ஓகே சொன்ன பிறகு நீங்கள் செய்வது சட்ட விரோதம்!

சர்க்கார்: ட்விட்டரில் விட்டு விளாசிய ரஜினிகாந்த்! அவங்களே ஓகே சொன்ன பிறகு நீங்கள் செய்வது சட்ட விரோதம்!



super-star-twit-about-sarkar-controversial-scenes

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். ஏற்கனவே படத்தின் டீசர் வெளியான போதே படம் முழுவதும் அரசியல்தான் என்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு படம் வெளியானது. படம் முழுவதும் அரசியல் கலந்த மாஸாக இருப்பதால் அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது சர்க்கார் திரைப்படம்.

இந்நிலையில் சர்க்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும், அந்த காட்சிகளை நீக்காவிட்டால் சர்க்கார் படம் தடைசெய்யப்படும் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சர்க்காருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Sarkar

மதுரை அண்ணாநகரில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில், சர்கார் படம் வெளியாகியுள்ள தியேட்டருக்கு எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதன் காரணமாக 3 திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் சென்சார் போர்டு ஒப்புதல் வழங்கிய ஒரு படத்தின் காட்சிகளை நீக்க போராட்டம் நடத்துவது, படத்தை திரையிட தடுப்பது சட்டத்துக்கு புறம்பான செயல் என ரஜினிகாந்த தனது த்விட்டேர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Sarkar

இது பற்றி அவர் கூறியதாவது: தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு,அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.