சினிமா

சூப்பர் சிங்கர் சீசன் 7-ன் வெற்றியாளர் இவர் தான்! 3 ஆம் இடத்தில் இரண்டு போட்டியாளர்கள். முழு விவரம் இதோ!

Summary:

Super singer season 7 winners list

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அணைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பல சீசன்களை கடந்துள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சீனியர், ஜூனியர் என இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசன் முடிவடைந்தது.

சீசன் 7 இல் வெற்றிபெறும் போட்டியாளருக்கு பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 5 போட்டியாளர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் இன்று சூப்பர் சிங்கர் சீசன் 7 இன் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த சீசனனின் மூன்றாவது இடத்தை சாம் விஷால் மற்றும் புண்யா இருவரும் பிடித்தனர். இரண்டாம் இடத்தை விக்ரம் பிடித்தார். அவருக்கு 25 லட்ச ருபாய் மதிப்பிலான வைர நெக்லெஸ் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் இந்த சீஸனின் வெற்றியாளர் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் மூக்குத்தி முருகன் சூப்பர் சிங்கர் சீசன் 7 ன் பட்டத்தை வென்றார். அவருக்கு 50 லட்ச ரூபாய் பதிப்பிலான வீடு பரிசாக வழங்கப்பட்டது.


Advertisement