
sunny leone act in new webseries
உலகளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் பெரும் கவர்ச்சி நடிகையாவார். மேலும் இவர் கவர்ச்சிக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது கதையுள்ள கதாபாத்திரங்களில் மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கவிருப்பதாக முடிவு செய்துள்ளார்.
மேலும் உலகில் அதிகம் தேடப்படும் பிரபலங்கள் பட்டியலில் இடம் பெற்று பாலிவுட்டில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.அதனை தொடர்ந்து சன்னி லியோன் தற்போது தமிழிலும் வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார்.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தி டர்ட்டி பிக்சரை தயாரித்த ஏக்தா கபூர் சன்னி லியோனை வைத்து காமசூத்ராவை மையமாகக் கொண்ட வெப் சீரீஸை தயாரிக்கஉள்ளாராம்.
காமசூத்ராவை மையமாகக்கொண்டு சில திரைப்படங்கள் தயாராகின. ஆனால் அவை தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அது தற்போது வெப் சீரியஸாக தயாராக உள்ளது.சன்னி லியோன் ஏற்கனவே ஏக்தா கபூர் தயாரிப்பில் ராகினி எம்.எம்.எஸ் 2 படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பிரபலமடைந்தார்.மேலும் காமசூத்ரா வெப் சீரிஸ் 13வது நூற்றாண்டில் ராஜாஸ்தானை சேர்ந்த ஒரு சமூக பெண்கள் ராஜாக்களுக்கு ஆசைநாயகியாக இருந்ததை அடிப்படையாக வைத்து இந்த வெப் சீரிஸ் தயாராகவுள்ளது.
Advertisement
Advertisement