சினிமா

முடிவுக்கு வருகிறதா விஜய் டிவியின் இந்த பிரபல சீரியல்! தீயாய் பரவும் புகைப்படம்! பெரும் சோகத்தில் ரசிகர்கள்!!

Summary:

பொதுவாக தற்காலத்தில் சினிமாக்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந

பொதுவாக தற்காலத்தில் சினிமாக்களை விட சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. மேலும் சின்னத்திரை நடிகர் , நடிகைகளுக்கும் சினிமாக்களை போலவே ஏராளமான ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவ்வாறு புதுப்புது கதாபாத்திரங்களுடன், வித்தியாசமான கதைக்களத்துடன் விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

மிகவும் விறுவிறுப்பாகவும் மக்களிடம் எதிர்பார்ப்பை தூண்டும் வகையிலும் இருக்கும் இத்தகைய தொடர்களுக்கென மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. இவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான தொடர் சுந்தரி நீயும் சுந்தரன் நானும். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரில் வினோத் பாபு மற்றும் தேஜஸ்வினி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர்.

ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்று வந்த இத்தொடருக்கு தற்போது மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு ஆதரவு இல்லை என கூறப்படுகிறது. மேலும் இந்நிலையில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடர் விரைவில் முடிவடைய இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி சீரியல் கதாபாத்திரங்கள் அனைவரும் இறுதியாக ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதனால் ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.


Advertisement