சுந்தரி கேப்ரியல்லாவிற்கு குழந்தை பிறந்தாச்சு.. அழகிய புகைப்படத்துடன் அவரே சொன்ன குட் நியூஸ்!!



sundari-gaprilla-blessed-with-girl-baby

சன் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைகளத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று 1100 எபிசோடுக்கு மேல் கடந்து ஹிட்டான தொடர்தான் சுந்தரி. இந்த தொடரில் முக்கிய கதாநாயகியாக கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்கள் மத்தியில் ரீச்சானவர் கேப்ரியல்லா செல்லுஸ்.

சுந்தரி நாயகி

துவக்கத்தில் டிக்டாக் மூலம் அறிமுகமான அவர் பின்னர் பல வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு யூடியூப், இன்ஸ்டாகிராம் என பிரபலமடைந்தார். மேலும் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சுந்தரி சீரியல் முடிந்து கேப்ரியல்லா வேறு தொடரில் கமிட்டாவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார்.


இதையும் படிங்க: மூன்றாவதாக வந்த குட்டி தேவதை.! நடிகை ஸ்ரீ லீலா பகிர்ந்த கியூட் புகைப்படம்.! நெகிழ்ந்து பாராட்டிய ரசிகர்கள்!!

பெண் குழந்தை 

மேலும் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். வளைகாப்பு நடைபெற்ற புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தற்போது கேப்ரியல்லாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது குழந்தையின் பிஞ்சு கரத்தின் புகைப்படத்தை பகிர்ந்து மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவருக்கு ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: மீனாட்சியின் அருளைப்பெற்ற விஜய்.. ரசிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி கிப்ட்.!