மீனாட்சியின் அருளைப்பெற்ற விஜய்.. ரசிகர் கொடுத்த இன்ப அதிர்ச்சி கிப்ட்.!



Actor vijay latest pic

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், தாண்டிக்குடி பகுதியில் நடிகர் மற்றும் தவெக தலைவரான விஜயின் ஜனநாயகன் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 

மூன்றாம் நாளான இன்று படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதனை முடித்துவிட்டு விஜய் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது திறந்தபடி வாகனத்தில் வந்த அவரை ரசிகர்கள் பலரும் நேரில் பார்த்து சென்றனர். 

actor vijay

அச்சமயம் ரசிகர் ஒருவர் விஜய்க்கு மாலை அணிவித்து அவரிடம் மீனாட்சி அம்மன் புகைப்படத்தையும் கொடுத்தார். அதனை விஜய்யும் அன்புடன் வாங்கிக் கொண்டார். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பிரபல நகைச்சுவை நடிகரின் மனைவி காலமானார்!! திரையுலகினர் அதிர்ச்சி.....

மேலும் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ரசிகர்கள் பலரும் நடிகர் விஜய் மீனாட்சி அம்மனின் அருளை பெற்றதாக பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அடேங்கப்பா... ரெட்ரோ திரைப்படத்திற்கு நடிகை பூஜா ஹெட்டே வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?