பிரபல நகைச்சுவை நடிகரின் மனைவி காலமானார்!! திரையுலகினர் அதிர்ச்சி.....

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணியின் மனைவி சாந்தி (வயது 67), இன்று காலை 10.30 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை மரணமடைந்தது கவலைக்கிடமானதாகும்.
கவுண்டமணியின் தமிழ் சினிமா நகைச்சுவை :
80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் நகைச்சுவையை ஆட்சி செய்தவர் கவுண்டமணி. செந்திலுடன் இணைந்து பல்வேறு ஹிட் கொமெடி காட்சிகள் மூலம் இன்றும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் ஒரு நினைவாக உள்ளார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா... ரெட்ரோ திரைப்படத்திற்கு நடிகை பூஜா ஹெட்டே வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?
1970ம் ஆண்டு 'ராமன் எந்தன் ராமனடி' திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், 1971ம் ஆண்டு 'தேனும் பாலும்' படத்தில் “சுப்பிரமணி” என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர், முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார்.
காதல் திருமணம்:
1963ம் ஆண்டு சாந்தியுடன் காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணிக்கு, செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
சாந்தியின் உடல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டு, குடும்பத்தினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைச்சுவையின் குயிலாக விளங்கிய கவுண்டமணியின் துணைவி இழப்பு சினிமா உலகத்தையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
இதையும் படிங்க: இப்படி பன்றீங்களே..! இதெல்லாம் உங்க கோபிக்கு தெரியுமா? பாக்கியலட்சுமி ராதிகாவை கலாய்கும் நெட்டிசன்கள்..!!