மூன்றாவதாக வந்த குட்டி தேவதை.! நடிகை ஸ்ரீ லீலா பகிர்ந்த கியூட் புகைப்படம்.! நெகிழ்ந்து பாராட்டிய ரசிகர்கள்!!



sri-leela-adopted-3rd-child

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ லீலா. அவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதன் மூலம் என்ட்ரி கொடுக்கிறார். மேலும் நடிகை ஸ்ரீ லீலா கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் 

நடனத்தின் மீது ஆர்வம்

மருத்துவ படிப்பை முடித்துள்ள நடிகை ஸ்ரீ லீலா நடனத்தின் மீதான ஆர்வத்தினால் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அவர் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர் காரம் படத்தில் 'குர்ச்சி மாடதபெட்டி' பாடலுக்கு போட்ட குத்தாட்டம் ரசிகர்களை கிறங்கடித்தது. மேலும் அல்லு அர்ஜுனின் 'புஷ்பா தி ரூல்' படத்தில் 'கிஸ்கிஸ்சிகா' பாடலிலும் வேற லெவல் ஆட்டம் போட்டிருந்தார். 


இதையும் படிங்க: எல்லாமே முகமூடி.! சில நடிகர்கள் கேமராவிற்கு முன்னாடிதான் அப்படி.! பளிச்சென உடைத்த நடிகை மாளவிகா மோகனன்.!

மூன்றாவது குழந்தை தத்தெடுப்பு

நடிகை ஸ்ரீ லீலா 2022 ஆம் ஆண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளாராம். அந்த குழந்தைக்கு முத்தமிடுவது போன்ற அழகிய புகைப்படத்தை பகிர்ந்த அவர் "இதயத்தின் மீதான படையெடுப்பு. வீட்டிற்குள் மற்றொருவர் கூடியுள்ளார்" என மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: அத்தனை போட்டோவும் அம்புட்டு அழகு... லவ் டுடே ஹீரோயின் இவானாவா இது?