எல்லாமே முகமூடி.! சில நடிகர்கள் கேமராவிற்கு முன்னாடிதான் அப்படி.! பளிச்சென உடைத்த நடிகை மாளவிகா மோகனன்.!



actress-malavika-mohanan-about-actors-who-against-women

தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வந்த பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். அதனை தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர், விக்ரமின் தங்கலான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்தியளவில் பிரபலமான நடிகையான அவர் தற்போது சர்கார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆண் பெண் வேறுபாடு

இந்நிலையில் பேட்டி ஒன்றில் மாளவிகா மோகனன் திரைத்துறையில் ஆண், பெண் வேறுபாடு பார்க்கப்படுவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சினிமாதுறையில் ஆண் என்றால் ஒரு மாதிரியும், பெண் என்றால் ஒரு மாதிரியும் பார்ப்பது ஆழமாக வேரூன்றியுள்ளது. இது எப்பொழுது முடிவுக்கு வரப்போகிறது என தெரியவில்லை. சினிமாவில் சில நடிகர்கள் உள்ளனர். தங்களை பெண்களை மதிப்பவர்கள் போல நன்கு காட்டிக்கொள்வர். அந்த முகமூடியைச் சரியான நேரத்தில் அணிந்து நல்ல பெயர் வாங்கிக்கொள்வர்.

இதையும் படிங்க: என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!

malavika mohanan

கேமராவிற்கு முன் முகமூடி

கடந்த 5 ஆண்டுகளில் இதனை நான் நிறைய ஆண் நடிகர்களிடம் பார்த்துள்ளேன். அவர்கள் தங்களை புத்திசாலி என நினைத்துக் கொள்கின்றனர்.எந்தெந்த நேரங்களில் பெண்களை புகழ்ந்து பேச வேண்டும் என்ற முகமூடியை அணிய நன்கு தெரியும். ஆனால் கேமராவுக்கு பின் அவர்கள் எப்படியெல்லாம் மாறுவார்கள்? என நான் பார்த்துள்ளேன் என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!