என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!



rambha-explain-the-reason-about-releaving-from-cinema

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், கமல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. நடிகை ரம்பா தமிழ் மட்டுமின்றி பிறமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சினிமாவிலிருந்து விலகிய ரம்பா

நடிகை ரம்பா கடந்த 2010-ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரு மகள்கள், ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். நடிகை ரம்பா சினிமாவில் இருந்து திடீரென விலகினார். இந்நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆர் யு ரெடி என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

ramba

இதையும் படிங்க: சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!

 

குழந்தைகளுக்காகதான் எல்லாம்

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ரம்பா, சினிமாவிலிருந்து விலகியிருந்ததற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதாவது, "எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்தபோது, எனது குழந்தைகளுடன் குறிப்பிட்ட வயது வரும் வரை ஒரு பெற்றோராவது உடன் இருக்கவேண்டும் என எண்ணினேன். அதனால் சில வருடங்கள் நான் சினிமாவில் இருந்து  விலகி குழந்தைகளுடன் இருந்தேன். ஆனாலும் நடிப்பில் எனக்கு இருந்த ஆர்வம் சிறிதும் குறையவில்லை. எனது முதல் காதல் எப்போதுமே சினிமாதான்" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!