சன் டீவியில் முக்கிய சீரியல்களின் நேரம் அதிரடி மாற்றம்! முக்கிய இடத்தை பிடித்த புது சீரியல்!

இந்திய அளவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஓன்று சன் தொலைக்காட்சி. புது புது சீரியல்கள், படங்கள், நிகழ்ச்சிகள் என மக்களை தன் வசப்படுத்தியுள்ளது சன் டிவி. ஒருகாலத்தில் இல்லத்தரசிகள் மட்டுமே டிவி சீரியல் பார்த்த காலம் மாறி தற்போது சிறியவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரையும் சீரியல் பார்க்க வைத்துவிட்டது சன் டிவி.
இந்நிலையில் விரைவில் ரன் என்ற புது சீரியல் ஒன்றை ஒளிபரப்ப உள்ளது சன் டிவி. இதற்கு முன்னர் ஒளிபரப்பான தெய்வம்கள் தொடரின் நாயகன் பிரகாஷ் இந்த தொடரில் நாயகனாக நடிக்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை தொடரின் நாயகி சரண்யா இதில் நாயகியாக நடிக்கின்றார்.
அடுத்த வாரம் தொடங்க உள்ள இந்த தொடரால் பழைய தொடர்களின் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளது. இதுவரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான ரோஜா தொடர் இனி இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. புதிய தொடரான ரன் அடுத்த வாரம் முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான அழகு தொடர் மாலை 6.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.