சிவாஜி வீட்டு மருமகளாகும் பிக்பாஸ் நாயகி, யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்.!suja-going-to-marry-sivaji-grandson

பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணிக்கும் சிவாஜியின் பேரன் சிவகுமாருக்கும் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

14 வயதில் சினிமாத்துறையில் நுழைந்து இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருப்பவர் சுஜா வருணி . நாயகியாக அறிமுகமானாலும், சினிமாவில் ஒற்றை பாடலுக்கு தான் இவர் அதிகமாக நடனமாடி இருக்கிறார். 

இதை தொடர்ந்து திரையுலகில் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கிறார் சுஜா வருணி. இந்நிலையில் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

suja

இந்நிலையில் சுஜா வருணியும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மகன் ராம்குமாரின் மகன்  சிவகுமாரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கக் குட்டி படம் மூலம் நடிகரானவர் சிவகுமார் என்கிற சிவாஜி தேவ். இவர் புதுமுகங்கள் தேவை, இதுவும் கடந்து போகும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

suja

இந்நிலையில் காதலரான நடிகர் சிவகுமாரை நவம்பர் 19ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சுஜா தெரிவித்துள்ளார்.