சினிமா

ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கன்னட நடிகரின் மரணம்.!! மனமுடைந்த ரசிகர்களுக்கு ஏற்பட்ட துயரம்..!!

Summary:

ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய கன்னட நடிகரின் மரணம்.!! ..!! ரசிகர் எடுத்த விபரீத முடிவு..!!

கன்னட சினிமா நடிகரான புனித் ராஜ்குமாருக்கு  (29.10.2021) அன்று காலையில் மாரடைப்பு  ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை சற்றும் எதிர் பார்க்காத புனித் ராஜ்குமாரின் ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சியடைந்தனர். 

இதனையடுத்து, திரையுலகைச் சேர்ந்தவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்களும், புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். பின்னர், புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம், மரூர் கிராமத்தைச் சேர்ந்த புனித் ராஜ்குமாரின் தீவிர ரசிகரரான பரசுராம் தேவம்மன்வார் என்பவர், அவர் இறந்த செய்தியை கேட்டதும், மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். பின்னர் அவர் , நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதே போல்  சதீஷ் என்ற மற்றொரு ரசிகர், புனித் ராஜ்குமார் மறைந்த வேதனை தாங்காமல், தனது உள்ளங்கையை தானே தாக்கிக்கொண்டுள்ளார். இதில் அவருடைய கை பயங்கரமாக சேதப்பட்டுள்ளது.


Advertisement