தமிழகம் சினிமா

பெற்றோர்கள் கவனத்திற்கு! சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Summary:

Strict warnings to school students

பள்ளிகளுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பலிகள் திறக்கும் தேதியில் மாற்றம் வரலாம் என செய்திகள் வெளியானதை அடுத்து ஜூன் 3 கட்டாயம் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் தொலைபேசி கொண்டு வரக்கூடாது என்றும் இருசக்கர வாகனங்களை எடுத்துவரக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீறினால், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மீண்டும் திருப்பித்தரப்படமாட்டாது எனவும் பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.

மேலும் இன்று வெளியான சுற்றறிக்கையில் மாணவர்கள் காலை 9 . 15 மணிக்குள் பள்ளியில் இருக்கவேண்டும் என்றும், பள்ளி விதிமுறைகளுக்கு உட்பட்டு சீருடையில் வரவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிறந்தநாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில்தான் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement