சினிமா

அட..நடிகர் சிம்புவா இது! இப்படி மாறிட்டாரே! வெளியான ஈஸ்வரன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்! வாயடைத்துப் போன ரசிகர்கள்!

Summary:

நடிகர் சிம்புவின் 46 வது படமான ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் மாநாடு என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு  நவம்பர் மாதத்திலிருந்து தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர் சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். 

அப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இதன் படிப்பிடிப்பு தற்போது திண்டுக்கல்லில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

 இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தலைப்பு விஜயதசமியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஈஸ்வரன் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் வருகிற 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ஈஸ்வரன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் செம்ம ஸ்லிம்மாக அடையாளமே தெரியாமல் மாறிய சிம்புவை கண்ட ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போயுள்ளனர். 


Advertisement