அடக்கடவுளே.. தளபதி விஜய் - சங்கீதா விவாகரத்தா?.. இதுதான் உண்மை நிலவரம்..! காட்டுத்தீயாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!!

அடக்கடவுளே.. தளபதி விஜய் - சங்கீதா விவாகரத்தா?.. இதுதான் உண்மை நிலவரம்..! காட்டுத்தீயாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!!



spreading rumor of actor vijay sangeetha divorce

 

தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் பலரும் 'தளபதி' என்று அழைத்து மகிழ்வர். இவர் தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில், விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்துவிட்டதாகவும், அதனால் சங்கீதா லண்டனுக்கு சென்றதாகவும் வதந்திகள் பரவியது. 

தளபதி விஜய்

மேலும் அதனால் தான் வாரிசு வெளியீட்டு விழாவிற்கு சங்கீதா வரவில்லை எனவும், இயக்குனர் அட்லீயின் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சிக்கும் வரவில்லை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்த உண்மை தற்போது வெளிவந்துள்ளது. விஜய் - சங்கீதா விவாகரத்து செய்துவிட்டார்கள் என்ற தகவல் உண்மை கிடையாது. இந்த பேச்சு எப்படி கிளம்பியது என்றும் தெரியவில்லை. மேலும் அவர்களுக்கிடையில் எவ்வித பிரச்சனையும் இல்லை. இருவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்று விஜய் மற்றும் சங்கீதாவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். 

தளபதி விஜய்

இதனால் விவாகரத்து குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் சங்கீதா தனது பிள்ளைகளின் வெக்கேஷனுக்காகவே லண்டனில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்கு சென்று இருக்கிறார் என்றும், விரைவில் நடிகர் விஜய்யும் லண்டனுக்கு சென்று சில நாட்கள் தங்கிவிட்டு பின் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வருவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை தவிர்த்து வேறு எந்த காரணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.