தமிழகம் சினிமா

வானம் தொட்டுப் போன மானமுள்ள சாமி..... குண்டுகள் முழங்க எஸ்.பி.பி உடலுக்கு மரியாதை.! கண்ணீர் மல்க ரசிகர்கள் இறுதியஞ்சலி.!

Summary:

SPB Funeral

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திரைப்பிரபலங்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல் அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள்அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து நேற்று இரவு 8 மணிக்கு எஸ்பிபி அவர்களின் உடல் சென்னை செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பண்ணை வீட்டில் அவரது உடலுக்கு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிலையில் காவல்துறை மரியாதையையுடன் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அரசு மரியாதையுடன் குண்டுகள் முழங்க எஸ்.பி.பி உடலுக்கு காவல்துறையினர் மரியாதை செலுத்தினர். கண்ணீர் மல்க உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் இறுதியஞ்சலி செலுத்தினர்.


Advertisement