சினிமா

கொரோனோவிற்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய நடிகர் சோனு சூட்! அதுவும் எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!

Summary:

நடிகர் சோனு சூட் கொரோனாவுக்கு பிறகு தனது சம்பளத்தை 4 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற கள்ளழகர், கோவில்பட்டி வீரலெட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார் நடிகர் சோனு சூட். இவர் பாலிவுட்டிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.

கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கபட்ட நிலையில் அவர், கொரோனோவை ஒழிக்க பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸுகள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் தங்குவதற்காக தனது 5 நட்சத்திர ஹோட்டலை வழங்கினார். 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுப்பது, வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வந்தது. வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை எற்படுத்தி கொடுத்தது உள்ளிட்ட ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். 

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது படப்பிடிப்புகள் நடைபெற்று வரும்நிலையில் தயாரிப்பாளர்கள் பலரும் அவரை நடிப்பதற்கு அணுகியுள்ளதாகவும் அவர் நான்கு கோடி சம்பளம் கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சோனு சூட் கொரோனோவிற்கு முன்பு 2 கோடி சம்பளம் வாங்கியதாகவும் தற்போது அதனை இரு மடங்காக உயர்த்தி கேட்பதாகவும் கூறப்படுகிறது.


Advertisement