அட இப்படி ஏமாத்திட்டாங்களே! பிக்பாஸ் வீட்டில் செல்போனா? தீயாய் பரவும் வீடியோ! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

அட இப்படி ஏமாத்திட்டாங்களே! பிக்பாஸ் வீட்டில் செல்போனா? தீயாய் பரவும் வீடியோ! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!


somu-sekar-using-mobile-in-bigboss

பிக்பாஸ் சீசன் 4 , 11 வாரங்களை கடந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் கடந்தவாரம் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடையவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் 100 நாட்கள் டிவி, ரேடியோ, செல்போன் என வெளியுலக தொடர்பு எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும். மேலும் குடும்பத்தினரையும் சந்திக்க முடியாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கமல், அனிதா சம்பத்திடம் பேசிக்கொண்டிருந்தபோது சோம் சேகர் செல்போன் பயன்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பிக்பாஸ்  ஒரு ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி என கூறப்படும் நிலையில், இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் என்ன ஒரு பித்தலாட்டம் , இப்படி ஏமாத்திட்டீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.