ப்பா.. கொட்டும் மழையில், நடுரோட்டில் என்னா ஸ்டைலு! செம மாடர்னாக கிக்கேத்தும் நடிகை சினேகா!!



snega-latest-photo-viral-gf2rar

தமிழ் சினிமாவில் கமல்,அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்  சினேகா. டாப் ஹீரோயினாக வலம் வந்த இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தனர்.  அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடித்தபோது அவர் நடிகர் பிரசன்னாவுடன் காதலில் விழுந்தார்.

அதனைத் தொடர்ந்து திருமணம் செய்துகொண்டு நட்சத்திர தம்பதிகளாக விளங்கிவரும் அவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளிவிட்டிருந்த சினேகா தற்போது மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்த நிலையில் சினேகா தற்போது கருப்பு நிற மாடர்ன் உடையில், கொட்டும் மழையில் நடுரோட்டில் நின்றவாறு தற்போதைய இளம் ஹீரோயின்களையே மிஞ்சுமளவிற்கு செம ஸ்டைலாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.