சினிமா

சிவகார்த்திகேயன் கெரியரில் இதுதான் முதல் முறை.! டாக்டர் படம் குறித்து கசிந்த முக்கிய தகவல்!

Summary:

Sivakarthikeyan Doctor Movie latest update

சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் கலக்கல் காமெடி படமாக உருவான கோலமாவு கோகிலா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே பிரபலமான இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தான் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் முக்கியமான காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் எடிட்டிங் வேலைகளை இயக்குனர் முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதேபோல் படத்தின் இசை தொடர்பான வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்து உள்ளதாக கூறப்படும் நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு காட்சிகளை வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் முடித்து, படம் வரும் தீபாவளிக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

தீபாவளிக்கு டாக்டர் படம் வெளியாகும் பட்சத்தில் தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் முதல் படம் இதுவே ஆகும். தற்போது வரை திரை அரங்குகள் திறக்கப்படாத நிலையில் தீபாவளிக்குள் திரையரங்குகளில் திறக்கப்பட்டு தீபாவளியின் போது வழக்கமான கொண்டாட்டம் இருக்கும் என திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.


Advertisement